தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதம்

மாணவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதம்

மாணவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதம்


UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM

ADDED : ஜூலை 29, 2011 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM ADDED : ஜூலை 29, 2011 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்றது. 3வது நாளான நேற்று மாணவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அல்லி அர்ஜுனா, தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற அஇஅதிமுக அரசு, சமச்சீர் கல்வியை நடைமுறைக்குக் கொண்டு வரக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக பல வேலைகளை செய்தது. சில குறைபாடுகள் இருக்கும் என்றால், அதை நிர்வாகரீதியாக சரி செய்திருக்கலாம். ஆனால் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற ஒரே அடிப்படை நோக்கத்துடன் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் 9 கோடி புத்தகங்கள் ரூ.200 கோடி செலவில் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டங்கள் இணைய தளங்களிலும், வெளியிடப்பட்டிருந்தன என தெரிவித்தார்.

மாணவர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து படித்துக் கொண்டிருந்த 10ம் வகுப்புக்கான புத்தகங்களின் நகலையும் அவர் நீதிமன்றத்தின் முன் வைத்தார்.

வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்துடன் அரசு விளையாடுகிறது. முந்தைய அரசு கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக சமச்சீர் கல்வியை கிடப்பில் போட முயற்சிப்பதாகவும் அந்தி அர்ஜுனா வாதிட்டார்.

இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us