UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM
ADDED : ஜூலை 29, 2011 05:00 PM
உள்நாடு, வெளிநாடுகளில் அதிகமான வேலைவாய்ப்பு மற்றும் நிறைவான வருமானம் தரும் படிப்பாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் இருக்கிறது. இப்படிப்பை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. அவை:
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஈவன்ட் மேனேஜ்மென்ட் இக்கல்வி நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும், 11 மாத டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் இத்துறையின் கீழ் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு www.niemindia.com
* காலேஜ் ஆப் ஈவன்ட்ஸ் அண்ட் மீடியா , புனே இக்கல்வி நிறுவனத்தில் இரண்டு வருட முதுநிலை பட்டப்படிப்பு உள்ளது. இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பிற்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது. மேலும் விபங்களுக்கு www.coemindia.com
* நேஷனல் அகாடமி ஆப் ஈவன்ட் மேனேஜ்மென்ட் அண்டு டெவலப்மென்ட் BBA., MBA., மற்றும் முதுநிலை டிப்ளமோக்களில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஏதேனும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.naemd.com
* சென்டர் பார் ரிசர்ச் இன் ஆர்ட் ஆப் பிலிம் அண்ட் டெலிவிஷன் , டில்லி இக்கல்வி நிறுவனத்தில் 9 மாத டிப்ளமோ பயிற்றுவிக்கப்படுகிறது. இதற்கு +2 மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.log2craft.org
* அமிதி ஸ்கூல் ஆப் கம்யூனிகேஷன், டில்லி இந்நிறுவனத்தில் இரண்டு வருட முதுநிலை படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.amity.edu
