தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப்-2 தேர்வில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை

குரூப்-2 தேர்வில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை

குரூப்-2 தேர்வில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை


UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM

ADDED : ஜூலை 30, 2011 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM ADDED : ஜூலை 30, 2011 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து நிருபர்களிடம், செல்லமுத்து கூறியதாவது: வணிக வரி உதவி அலுவலர், வருவாய் உதவியாளர், தலைமை செயலக உதவிப் பிரிவு அலுவலர், நகராட்சி கமிஷனர், உள்ளிட்ட 6,695 காலி பணியிடங்களுக்கான குரூப் -2 தேர்வுகள், இன்று நடக்கிறது.

தமிழகம் முழுவதும் 104 மையங்களில், 1,729 தேர்வுக்கூடங்களில், 4,80,405 பேர், இத்தேர்வை எழுதுகின்றனர். அனைத்து மாவட்ட கருவூலகங்களுக்கும், வினாத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, குரூப்-2 தேர்வுக்கு, தேர்வு செய்தவர்கள் பட்டியல், கோர்ட் வழக்கு முடிந்த உடன் வெளியிடப்படும். வி.ஏ.ஓ., தேர்வு எழுதிய எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளது.

கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், வெளியிட முடியவில்லை. வழக்கு முடிந்த உடன், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள பத்தரக்கோட்டை பகுதியில், குரூப் -2 தேர்வுக்கான விடைகள் விற்பனை செய்வது குறித்து பத்திரிகைகளில், செய்தி வந்தது. அதன்படி, கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், எஸ்.பி., உள்ளிட்டோர், அப்பகுதியைச் சேர்ந்த மதுரவேல் என்பவரிடம் விசாரணை செய்தனர்.

அதில் உண்மை இல்லை என்று, எங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், முறைகேடு நடைபெறுகிறது என்று யாராவது, புகார் கொடுத்தால், அதுகுறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வில், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு அறையில், முறைகேடு செய்பவர்களுக்கு உதவி செய்யும் அலுவலர்கள் மீது, கிரிமினல் வழக்கு தொடரப்படும். இவ்வாறு செல்லமுத்து கூறினார்.

தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை ஏன் இணையதளத்தில் வெளியிடுவதில்லை, என்ற கேள்விக்கு,"எங்கள் அலுவலகத்தில், அலுவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு, மக்கள் எதற்கெடுத்தாலும், கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். இருக்கின்ற அலுவலர்களும், அடிக்கடி கோர்ட்டுக்கு செல்வதால், மேற்கண்ட பணிகளில் ஈடுபட முடிவதில்லை" என்று செல்லமுத்து கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us