UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM
ADDED : ஜூலை 30, 2011 01:02 PM
தமிழகத்தில் உள்ள 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஜுலை 28ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாளான ஜுலை 29ம் தேதியன்று, 511 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 332 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு வந்திருந்தனர். இதில் 30 மாணவர்கள் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.
மீதமுள்ள 302 மாணவர்களில், 281 மாணவர்கள் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பையும், 21 மாணவர்கள் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பையும் தேர்வு செய்தனர்.
வெள்ளிக்கிழமையன்று எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் மொத்தம் 302 மாணவர்கள் சேர்க்கை பெற்று அதற்கான ஆணையைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த மாணவர்கள் சேர்க்கை போக சுயநிதி பொறியியல் கல்லூரியில் மீதமுள்ள 496 இடங்களுக்கும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 53 இடங்களுக்கும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 847 இடங்களுக்கும் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.
சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள காலியிடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள காலியிடங்கள் குறித்த விவரம் அறிய கீழ்கண்ட இணைப்புகளைப் பார்க்கவும்.
சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள காலியிடங்கள்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=3397&cat=8
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள காலியிடங்கள்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=3396&cat=8
சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள காலியிடங்கள்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=3398&cat=8
