UPDATED : ஆக 01, 2011 12:00 AM
ADDED : ஆக 01, 2011 11:04 AM
இன்று காலையில் கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவர்களை, மூத்த மாணவர்கள் வரவேற்றனர். மேலும், ராகிங்கை எதிர்த்து உறுதி மொழி ஏற்றனர். முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி வகுப்பு துவங்குவதையொட்டி சென்னை மருத்துவக் கல்லூரியில் இன்று ராகிங்கிற்கு எதிராக மூத்த மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் விளக்கப் படத்தை மூத்த மாணவர்கள் திரையிட்டுக் காண்பித்தனர். இந்த நிகழ்ச்சிகள், இருதரப்பு மாணவர்களிடையே ஒரு நட்புறவை வளர்க்கும் விதத்தில் அமையும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற வழிகாட்டும் திட்டத்தை தமிழகத்தில் உள்ள பல அரசு மருத்துவக் கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 1,653 எம்.பி.பி.எஸ். சேர்க்கை இடங்களில், கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அதன்படி, முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வில் சேர்க்கை பெற்று, ஆனால் கல்லூரியில் சேராமல் தவிர்த்ததால் உண்டான 5 இடங்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் வகுப்புகள் துவங்குகின்றன.
