தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நம்பிக்கையே 50 சதம் வெற்றி: காமன்வெல்த் வீரர் பேச்சு

நம்பிக்கையே 50 சதம் வெற்றி: காமன்வெல்த் வீரர் பேச்சு

நம்பிக்கையே 50 சதம் வெற்றி: காமன்வெல்த் வீரர் பேச்சு


UPDATED : ஆக 01, 2011 12:00 AM

ADDED : ஆக 01, 2011 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2011 12:00 AM ADDED : ஆக 01, 2011 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

"எதையும் செய்ய முடியும் என நினைத்தாலே 50 சதம் வெற்றி பெற்று விடுவோம். நம்மால் முடியாது என நினைத்தால் 50 சதம் தோல்வி அடைந்து விடுவோம். எனவே முயற்சி செய்பவர்களுக்கு தான் கடவுள் துணை இருப்பார்" என, காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கங்களை பெற்ற ஓம்கார் சிங் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின் 11வது விளையாட்டு விழா நடந்தது. காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடும் பிரிவில் 3 தங்கப்பதக்கங்களை பெற்ற வீரர் ஓம்கார் சிங், விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றார்.

எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியாகவும், 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தனியாகவும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிலம்பு, லெஸ்யூம், அகட, விகட நிகழ்ச்சி, ஆதிவாசி நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவுக்கு தாளாளர் மணிமேகலை தலைமை வகித்தார்.

செயலாளர் மோகன்தாஸ், இந்திய கப்பல் படை துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர் சஞ்சய் தத், டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் பெருமாள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ஓம்கார் சிங் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: படிப்பு, விளையாட்டு ஆகிய எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல; விளையாட்டில் பங்கேற்பதுதான் முக்கியம். எதையும் என்னால் செய்ய முடியும் என்று நினைத்தாலே 50 சதம் வெற்றி பெற்றதற்கு சமம். அது என்னால் செய்ய முடியாது என்று நினைத்தால் 50 சதம் தோல்வி அடைந்ததற்கு சமம். கடும் முயற்சி செய்பவர்களுக்குத் தான் கடவுள் துணை இருப்பார். இம்முறை தோல்வி அடைந்தவர்கள், மன வருத்தம் அடையாமல் தொடர்ந்து பயிற்சி பெற்று அடுத்த முறை முதலில் வர முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு, ஓம்கார் சிங் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us