துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பி.இ.க்கு விண்ணப்பிக்கலாம்
துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பி.இ.க்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஆக 01, 2011 12:00 AM
ADDED : ஆக 01, 2011 12:53 PM
அ நிறம் | அளவு
பிளஸ் 2 பொது தேர்வில் தோல்வியடைந்தோருக்காக நடத்தப்பட்ட உடனடித் தேர்வின் முடிவுகள், கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் 12ம் தேதி நடக்கும் பி.இ., துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ரூ
.500 செலுத்தி (எஸ்.சி./எஸ்.சி.எ./எஸ்.டி. மாணவர்கள் அவர்களது ஜாதி சான்றிதழை காண்பித்து ரூ.250 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்) நேரில் வந்து மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்.விண்ணப்பம்
, சென்னை அண்ணா பல்கலையில் மட்டும், இன்று முதல் வரும் 5ம் தேதி வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, 5ம் தேதி கடைசி நாள்.பொது கவுன்சிலிங் முடிந்தபின்
, காலியாக உள்ள இடங்களை, 12ம் தேதி நடக்கும் துணை கவுன்சிலிங்கில், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.