UPDATED : ஆக 02, 2011 12:00 AM
ADDED : ஆக 02, 2011 12:29 PM
மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும் நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் எனப்படும் என்.ஐ.சி., ஐ.சி.டி., எனேபிள்டு கவர்னென்ஸ் துறையில் மிக முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் பல்வேறு பிரிவுகளிலும் இந்த நிறுவனத்தின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.
இவை தவிர பல்வேறு துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இகவர்னென்ஸுக்கு இந்த நிறுவனத்தையே சார்ந்து உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நிறுவனத்தில் சயின்டிபிக் ஆபிசர்/இன்ஜினியர் பிரிவுகளில் உள்ள 62 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்:
என்.ஐ.சி.,யின் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 05.08.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., போன்ற பிரிவுகள் ஏதாவது ஒன்றில் கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இயற்பியல், கணிதம், புள்ளியியல், ஆப்பரேஷன்ஸ் ரிசர்ச் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி., படிப்பை முடித்து அதன் பின்னர் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் மூலமாக கம்ப்யூட்டர் பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் குறித்த முழுமையான விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
பிற தகவல்கள்:
நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டரின் காலி இடங்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. எழுத்துத் தேர்வு 04.09.2011 அன்றும் நேர்காணல் 17.11.2011 முதலும் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்.ஐ.சி.,யின் இந்த காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் 05.08.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை கவனமாக நினைவில் கொள்ளவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.08.2011
இணையதள முகவரி: http://recruitment.nic.in/recruitment/Advertisement.pdf
