தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ காத்திருப்போர் பட்டியலில் 195 மாணவர்கள்

மருத்துவ காத்திருப்போர் பட்டியலில் 195 மாணவர்கள்

மருத்துவ காத்திருப்போர் பட்டியலில் 195 மாணவர்கள்


UPDATED : ஆக 03, 2011 12:00 AM

ADDED : ஆக 03, 2011 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2011 12:00 AM ADDED : ஆக 03, 2011 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிகத்தில் மொத்தமுள்ள 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 913 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இதுவரை 756 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 157 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தற்போது 18 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 766 இடங்கள் காலியாக உள்ளன.

ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்ற கலந்தாய்விற்கு 513 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 173 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு வந்திருந்தனர். அதிலும் 9 மாணவர்கள் படிப்பை தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர். 97 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றனர்.

இதில், 59 மாணவர்கள் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். 5 மாணவர்கள் அரசு பல் மருத்தவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பிலும், 33 மாணவர்கள் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். படிப்பிலும் சேர்க்கை பெற்றனர்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஓசி பிரிவு மாணவர்களுக்கு ஒரு காலியிடமும் இல்லை. ஆனாலும், தினமும் ஓசி பிரிவு மாணவர்களும் சேர்த்தே கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தினமும் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி வரை காத்திருப்போர் பட்டியலில் 195 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us