UPDATED : ஆக 03, 2011 12:00 AM
ADDED : ஆக 03, 2011 05:36 PM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலையில் தொலைதூரக் கல்வி முறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு பட்டப்படிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. அதன்படி, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. போன்ற முதுகலை பட்டப்படிப்புகளுக்கான ஆண்டுத் தேர்வை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தும். ஆகஸ்ட் மாதம் துவங்கும் தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்களின் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu வெளியாகியுள்ளது. மாணவர்கள், அவர்களது பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு தங்களது தேர்வு மையங்களை அறிந்து கொள்ளலாம்.
