தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணை கவுன்சிலிங் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 கடைசி நாள்

துணை கவுன்சிலிங் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 கடைசி நாள்

துணை கவுன்சிலிங் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 கடைசி நாள்


UPDATED : ஆக 04, 2011 12:00 AM

ADDED : ஆக 04, 2011 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2011 12:00 AM ADDED : ஆக 04, 2011 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த மாதம் 8ம் தேதியில் இருந்து, சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதுவரை 78 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 69 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்நிலையில், பொதுப்பிரிவு கவுன்சிலிங், வரும் 11ம் தேதியுடன் முடிகிறது. இதற்கிடையே, பிளஸ் 2 உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கும் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு அளிக்கும் வகையில், துணை கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

இதற்காக, கடந்த 1ம் தேதியில் இருந்து அண்ணா பல்கலையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஆகஸ்ட் 5ம் தேதி மாலை 5.30 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இவர்களுக்கு, ஆகஸ்ட் 12ம் தேதியில் இருந்து அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us