16ம் தேதி பாராமேடிகல் படிப்புகளுக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்
16ம் தேதி பாராமேடிகல் படிப்புகளுக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்
UPDATED : ஆக 04, 2011 12:00 AM
ADDED : ஆக 04, 2011 10:26 AM
அ நிறம் | அளவு
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சிலிங், கடந்த மாதம் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்தது. இதில், இப்படிப்புகளுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன.
முதல்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில், மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட பொது கவுன்சிலிங், வரும் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை, சென்னை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கிறது.
விண்ணப்பதாரர்களில், கட்-ஆப் மதிப்பெண் 162.75 முதல் 132.25 வரை பெற்றுள்ளவர்கள் இக்கவுன்சிலிங்கில் பங்கேற்க, தேதி வாரியாக அழைக்கப்பட்டுள்ளனர்.
"
கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், www.tnhealth.org, www.tn.gov.in இணையதளங்களில் தங்கள் கவுன்சிலிங் தேதியை தெரிந்து கொள்ளலாம்" என, கூடுதல் மருத்துவக் கல்லூரி இயக்குனர் ஷீலா கூறினார்.