UPDATED : ஆக 04, 2011 12:00 AM
ADDED : ஆக 04, 2011 12:10 PM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் இந்த கல்வியாண்டில் பொறியில் பாடப்பிரிவில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு புதன்கிழமை வகுப்புகள் துவங்கின.
அண்ணா பல்கலையில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு
, இரண்டு நாட்களுக்கு முன்பே, பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாடுகள், நடைமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த நிலையில்
, அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், பல்கலைக்கழக வளாகததில் மாணவர்கள் செல்பேசியை பயன்படுத்தலாம். ஆனால் வகுப்பறையில் செல்பேசியை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் முதல் கட்டமாக 10 நாட்கள் சஸ்பென்ட் செய்யப்படுவர். அதே மாணவர் மீண்டும் செல்பேசி வைத்திருந்து பிடிபட்டால், ஒரு மாதம் வரை சஸ்பெண்ட் செய்யப்படுவார்.ஒரு மாதம் வரை சஸ்பெண்ட செய்யப்பட்டால்
, மாணவருக்கு வகுப்புகள் பாதிக்கப்படும். எனவே, மாணவர்கள் வகுப்பறையில் செல்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆடைகளை மட்டுமே மாணவ
, மாணவிகள் அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும்.மூத்த மாணவர்கள்
, முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்யக் கூடாது. ராகிங்கில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதைக் கண்காணிக்க தனிக் குப பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.