தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2011-12ம் கல்வியாண்டில் 34 புதிய கல்லூரிகள்

2011-12ம் கல்வியாண்டில் 34 புதிய கல்லூரிகள்

2011-12ம் கல்வியாண்டில் 34 புதிய கல்லூரிகள்


UPDATED : ஆக 04, 2011 12:00 AM

ADDED : ஆக 04, 2011 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2011 12:00 AM ADDED : ஆக 04, 2011 04:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2011-12ம் கல்வியாண்டில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 34 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.

இந்த புதிய கல்லூரிகளையும் சேர்த்த தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 500 எட்டியுள்ளது.

புதிய கல்லூரிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால், தற்போது வரை ஒட்டு மொத்தமாக பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான இடம் 2.20 லட்சம் இடங்களாக உயர்ந்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான இடம் 1.50 லட்சத்தை எட்டியுள்ளது.

இதனால் இந்த கல்வியாண்டில் காலியாக இருக்கும் பொறியியல் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிய கல்லூரிகள் துவங்க அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலிடம் 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து ஏஐசிடிஇ புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது.

கடந்த திங்கட்கிழமை வரை 29 கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றிருந்தன. இந்த நிலையில், 2 நாட்களில் கூடுதலாக 5 கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. மேலும் பல கல்லூரிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us