தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வசூலுக்காக இணைவிப்பு கல்லூரிகளிடம் கெடுபிடி

வசூலுக்காக இணைவிப்பு கல்லூரிகளிடம் கெடுபிடி

வசூலுக்காக இணைவிப்பு கல்லூரிகளிடம் கெடுபிடி


UPDATED : ஆக 06, 2011 12:00 AM

ADDED : ஆக 06, 2011 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2011 12:00 AM ADDED : ஆக 06, 2011 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இணைவிக்கப்பட்ட கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கு ஆண்டுதோறும் இணைவிப்பு (அபிலியேஷன்) பெற வேண்டும் என மதுரை அண்ணா தொழில் நுட்ப பல்கலை நிர்ணயித்துள்ளது. இதனால் ஆண்டு தோறும் இப்பல்கலை உயர்அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து இணைவிப்பு பெற வேண்டிய நிலை கல்லூரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கூடுதல் தொகை

தரமறுக்கும் கல்லூரிகளுக்கு இணைவிப்பு தர மறுப்பதால் கல்லூரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

கடந்த கல்வியாண்டில் மதுரை அண்ணா தொழில் நுட்ப பல்கலை மதுரை காமராஜ் பல்கலை நகர் வளாகத்தில் தற்காலிக கட்டடத்தில் துவக்கப்பட்டது

. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 36 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைக்கப்பட்டன. தற்போது 41 கல்லூரிகளாக உயர்ந்துள்ளது.

5

ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பாடபிரிவுகளுக்கு நிரந்தர இணைவிப்பு ( பெர்மனென்ட் அபிலியேஷன்) வழங்கலாம் என யு.ஜி.சி., நிர்ணயித்துள்ளது. ஆனால் அண்ணா பல்கலையுடன் இணைவிக்கப்பட்ட கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் பாட பிரிவுகளுக்கு பல்கலையில் இருந்து இணைவிப்பு அனுமதி பெறவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த தி

.மு.க., ஆட்சியில் நிர்வாக வசதிக்காக என கூறி சென்னை அண்ணா பல்கலை 5 அண்ணா தொழில் நுட்ப பல்கலைகளாக சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, மதுரை ஆகிய 5 இடங்களில் துவக்கப்பட்டது. 5 துணைவேந்தர்களும் நியமிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு பாடபிரிவு இணைவிப்பு அனுமதிக்கு தலா ரூ

.3 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது. ஜூன் மாதத்திற்குள் கல்லூரிகள் இணைவிப்பு அனுமதி பெற்றன. தற்போது கல்லூரி நிர்வாகிகள் சங்கத்திலிருந்து ரூ.75 லட்சம் மதுரை அண்ணா பல்கலை உயர்அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டது. முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் வகுப்புக்கே வராத பல மாணவர்களுக்கு பணம் வாங்கி கொண்டு பட்டம் தரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகி ஒருவர், அண்ணா பல்கலைக்கும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் இடையே வசூல் பணத்தை வழங்கும் புரோக்கராக செயல்படுவதாக தெரிகிறது.

பணம் வாங்கியும் அனுமதி வழங்கவில்லை

. கல்லூரி நிர்வாகங்கள் பல்கலையை தொடர்பு கொண்ட போது ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு பாடபிரிவுக்கும் மேலும் ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என நிர்பந்திப்பதாக பல கல்லூரி நிர்வாகங்கள் புகார் கூறுகின்றன. தரமறுக்கும் கல்லூரிகளில் மீண்டும் ஆய்வு ( இன்ஸ்பெக்ஷன்) என பல்கலை அதிகாரிகள் கூறிவிட்டனர்.தலா ரூ. 5 லட்சம் கொடுத்த 4 கல்லூரிகளுக்கு மட்டும் பல்கலைஉயர்அதிகாரிகள் அனுமதி வழங்கி விட்டனர்.

கூடுதல் பணம் தரமறுக்கும் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் பல பாதிக்கப்பட்டுள்ளன

. இப்பல்கலையுடன் இணைவிக்கப்பட்ட ஒரு கல்லூரியிடம் இருந்து பெற்ற ரூ. 3 லட்சத்தை திரும்பி அக்கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்து விடும் படி பல்கலை உயர்அதிகாரி ஒருவர் கூறிவிட்டாராம். அவர் செய்தது தொழில் தர்மத்திற்காக அல்ல.

அக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கூடுதல் நன்கொடை வசூலிப்பதாலும்

, கூடுதல் பாட வகுப்புகளை நடத்துவதாலும் குறைந்தது ரூ. 10 லட்சத்தை அக்கல்லூரி நிர்வாகம் தந்திருக்க வேண்டும். ரூ.3 லட்சம் என்பது குறைவான தொகை அதை திருப்பி அக்கல்லூரி நிர்வாகத்திடமே கொடுத்து விடுங்கள். என்னிடம் நேரடியாக அக்கல்லூரி நிர்வாகத்தை வரவைக்கிறேன். அப்போது அக்கல்லூரியை கவனித்துக்கொள்கிறேன் என இப்பல்கலை உயர்அதிகாரி ஒருவர் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தினரிடம் கூறிவிட்டாராம்.

மீண்டும் ஒரே அண்ணா பல்கலையாக செயல்படும் என தற்போதைய அரசு அறிவித்துள்ளது

. அதனால் இருப்பதை கறந்து விட்டு செல்வது என மதுரை அண்ணா பல்கலை உயர் அதிகாரிகள் கல்லூரிகளிடம் வசூலில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக பல கெடுபிடி நாடகங்கள். தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் மதுரை அண்ணா பல்கலையில் வசூல் காட்சிகள் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us