இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கான தேர்வில் வினாத்தாள் அவுட்?
இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கான தேர்வில் வினாத்தாள் அவுட்?
UPDATED : ஆக 07, 2011 12:00 AM
ADDED : ஆக 07, 2011 03:56 PM
அ நிறம் | அளவு
மதுரை
இதில்
, சட்டப் பட்டதாரிகள் பங்கேற்றனர். மதுரையில் மீனாட்சி கல்லூரி மையத்தில், தேர்வாளர்களுக்கு அறை எண் 15ல் வினாத்தாள் வழங்கினர். முன்னதாக, இரண்டு பேரிடம் கையெழுத்தும் பெறப்பட்டது. அப்போது, இரண்டு வினாத்தாள்கள் லேசாக சேதமடைந்து இருந்துள்ளன. அறையில் இருந்தவர்கள், வினாத்தாள், &'அவுட்&' ஆகிவிட்டது எனக் கூறி, தேர்வு எழுத மறுத்தனர்.அவர்கள்
கூறுகையில், &'எங்களை வெளியே செல்ல விடாமல், போலீஸ் மூலம் தேர்வு அறைக்குள் இருக்கச் செய்தனர். தேர்வு நேரம் முடிந்த பின் வெளியேற்றினர். தேர்வறை கண்காணிப்பாளர்களும் வினாத்தாள் சேதமடைந்ததாக எழுதிக் கொடுத்துள்ளனர். தேர்வை ரத்து செய்ய வேண்டும்&' என்றனர். வினாத்தாள் அவுட் ஆனதா? என, டி.ஆர்.ஓ., முருகேஷ் விசாரணை நடத்தினார்.அவர்
கூறியதாவது, &'வினாத்தாள் கவர் சீல் வைத்து இருந்தது. அதில் சேதம் இல்லை. வேறு மாநிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. கட்டுகளை வாகனங்களில் கொண்டு வருகையில் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. தேர்வாளர்கள் தேர்வை எழுதி விட்டனர்&' என்றார்.டி
.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து, &'வினாத்தாள் குறித்து டி.ஆர்.ஓ., விசாரித்து தகவல் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது&' என்றார்.