UPDATED : ஆக 08, 2011 12:00 AM
ADDED : ஆக 08, 2011 10:56 AM
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் பொறியியல் கலந்தாய்வில் ஆகஸ்ட் 8ம் தேதி காலையில் மொத்தம் 56,840 இடங்கள் சேர்க்கைக்காக உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எஸ்.சி.ஏ. பிரிவில் 1 இடம் மட்டுமே காலியாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 840 இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 55,999 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 56,840 இடங்கள் மாணவர் சேர்க்கைக்கு காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையில், ஒசி பிரிவினருக்கு 92 இடங்களும், பிசிஎம் பிரிவினருக்கு 37 இடங்களும், பிசி பிரிவினருக்கு 300 இடங்களும், எம்பிசி பிரிவினருக்கு 212 இடங்களும், எஸ்சிஏ பிரிவினருக்கு 31 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 156 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 12 இடங்களும் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
