தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்போம்-ஜெ.

சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்போம்-ஜெ.

சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்போம்-ஜெ.


UPDATED : ஆக 08, 2011 12:00 AM

ADDED : ஆக 08, 2011 03:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2011 12:00 AM ADDED : ஆக 08, 2011 03:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, "சமச்சீர் கல்வி குறித்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பிற்காக தமிழக அரசு காத்திருக்கிறது. தீர்ப்பு வந்த பிறகு அந்த தீர்ப்பை ஏற்று தமிழக அரசு அமல்படுத்தும்" என்றும் தெரிவித்தார்.

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலேயே அமல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 6 நாட்கள் நடைபெற்றது. தமிழக அரசு தரப்பிலும், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொது நலன் என இரண்டு தரப்பிலும் வாதங்கள் நடந்து முடிந்தன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குழு, தமிழகத்தில் சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இன்றோ அல்லது நாளையோ உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் இந்த உறுதி மொழியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us