UPDATED : ஆக 08, 2011 12:00 AM
ADDED : ஆக 08, 2011 05:27 PM
ஏரே-நாட்டிகல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 1401 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 1118 பேர் மாணவர்கள், 283 பேர் மாணவிகளாவர்.
மாணவிகள் மிகக் குறைவாக சேர்ந்துள்ள பாடப்பிரிவாக ஆட்டோமொபைல் உள்ளது. இதில் மொத்தம் சேர்ந்துள்ள 632 பேரில் 3 பேர் மட்டுமே மாணவிகள்.
சிவில் இன்ஜினியரிங்கில் 9307 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களில் 6966 பேர் மாணவர்கள், 2341 பேர் மாணவிகள்.
தமிழ் மீடியம் சிவில் இன்ஜினியரிங்கில் 274 பேர் சேர்ந்துள்ளனர். அதில் 116 பேர் மாணவர்கள், 158 மாணவிகள் ஆவர்.
தமிழ் மீடியம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் மொத்தம் 260 பேர் சேர்ந்துள்ளனர். இதரப் பாடப்பிரிவுகளில் மொத்தமுள்ள 5035 இடங்களில் இதுவரை 3677 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ள மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில், இதுவரை 19176 பேர் சேர்ந்துள்ளனர். இதில் வெறும் 90 மாணவிகள் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர்.
மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ள இ.சி.இ. பாடப்பிரிவில் 21152 பேர் சேர்ந்துள்ளனர். அதிக சேர்க்கை நடந்துள்ளப் பாடப்பிரிவாகவும் இ.சி.இ. பாடப்பிரிவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
