தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழங்குடியின மாணவனின் கல்விக் கனவு பலிக்குமா

பழங்குடியின மாணவனின் கல்விக் கனவு பலிக்குமா

பழங்குடியின மாணவனின் கல்விக் கனவு பலிக்குமா


UPDATED : ஆக 09, 2011 12:00 AM

ADDED : ஆக 09, 2011 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2011 12:00 AM ADDED : ஆக 09, 2011 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலகிரியில், பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவனுக்கு, எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், டாக்டர் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி மாயார் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்; தந்தை சின்னபண்டன்; கூலித் தொழிலாளி; தாய் மாதாயி. பழங்குடியின இருளர் வகுப்பைச் சேர்ந்த மணிகண்டன், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1074 மதிப்பெண் பெற்றார்.

சேலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், இடம் கிடைத்துள்ளது. பொருளாதார ரீதியில், மிகவும் பின்தங்கியுள்ள இவர்களுக்கு, கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை உள்ளது.

"என் மருத்துவக் கல்விக்கு, அரசு உதவ வேண்டும்" என்ற வேண்டுகோளுடன், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம், நேற்று மனு அளித்தார். கல்விக் கடன் வழங்க, நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளருக்கு, கலெக்டர் பரிந்துரைத்துள்ளார். பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மக்களில், மாணவன் மணிகண்டன், எம்.பி.பி.எஸ்., சீட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க நிலையில், மனம் படைத்தவர்கள் உதவ விரும்பினால், 91596-96418 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us