செட் தேர்வு ஹால் டிக்கெட்: பாரதியார் பல்கலை அறிவிப்பு
செட் தேர்வு ஹால் டிக்கெட்: பாரதியார் பல்கலை அறிவிப்பு
UPDATED : ஆக 10, 2011 12:00 AM
ADDED : ஆக 10, 2011 09:39 AM
பாரதியார் பல்கலை வெளியிட்ட அறிக்கை: பாரதியார் பல்கலை, புதுடில்லி பல்கலை மானியக் குழுவின் அனுமதியோடு, உதவி பேராசிரியர்கள் / விரைவுரையாளர்களுக்கான மாநில தகுதிகாண் (செட்) தேர்வை நடத்துகிறது. இத்தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 10 முதன்மைத் தேர்வு மையங்கள் மூலம் 53 தேர்வு மையங்களில் வரும் 14ம் தேதி நடக்கிறது. பல்கலை மானியக்குழு அனுமதித்துள்ள 27 பாடப்பிரிவுகளில் நடக்கும் இத்தேர்வு, தாள்-1, 2 மற்றும் தாள் - 3 என மூன்று பகுதிகளை கொண்டது. முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் 14ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.00 மணி வரையும், மூன்றாம் தாள் தேர்வு அன்று மதியம் 1.30 முதல் மாலை 4.00 மணி வரையும் நடக்கிறது.
இத்தேர்வெழுத 51 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தேர்வெழுத தகுதியுடையவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் அவர்களின் தேர்வு மையம் உள்ளிட்ட விபரங்கள் பல்கலை இணையதளத்தில்() வெளியிடப்பட்டுள்ளது; விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்பதை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் நுழைவுச்சீட்டு(ஹால் டிக்கெட்) அவர்கள் வீட்டின் முகவரிக்கு ஆக., 10க்குள்(இன்று) கிடைக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறாதவர்கள் பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியையோ அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தையோ தொடர்பு கொண்டு, தேர்வெழுதுவற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். தொடர்பு விபரங்கள் பல்கலை இணையதளத்தில் உள்ளன. மேலும் விபரங்களுக்கு, 0422 - 242 8171, 242 8173, 242 8155, 242 2752 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
