UPDATED : ஆக 10, 2011 12:00 AM
ADDED : ஆக 10, 2011 05:51 PM
அ நிறம் | அளவு
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள ஆணையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நாள் 29,05,2009ல் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை நிரப்ப தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
விருப்பமுடைய தாழ்த்தப்பட்ட இன விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்ற ஒதுக்கீட்டு ஆணை மற்றும் அசல் சான்றிதழ்களுடன் 14தேதி காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளவும். அதன்பிறகு கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
