தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கவுன்சிலிங் இன்றுடன் முடிகிறது

பொறியியல் கவுன்சிலிங் இன்றுடன் முடிகிறது

பொறியியல் கவுன்சிலிங் இன்றுடன் முடிகிறது


UPDATED : ஆக 11, 2011 12:00 AM

ADDED : ஆக 11, 2011 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2011 12:00 AM ADDED : ஆக 11, 2011 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜூன் 30ம் தேதியில் துவங்கி, சில தினங்கள் வரை நடந்தன. கடந்த மாதம் எட்டாம் தேதி துவங்கிய பொதுப்பிரிவு கவுன்சிலிங், இன்றுடன் முடிகிறது. ஒன்றரை மாதங்களாக நடந்த கவுன்சிலிங்கில், நேற்று முன்தினம் நிலவரப்படி, 99 ஆயிரத்து 457 பேர், பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அண்ணா பல்கலை மற்றும் அவற்றின் கல்லூரிகளில், 6,870 இடங்களும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், 4,554 இடங்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளில், 88 ஆயிரத்து, 33 இடங்களும், கவுன்சிலிங் மூலம் நிரம்பியுள்ளன. 49 ஆயிரத்து, 561 இடங்கள் காலியாக இருந்தன. இதில், நேற்று 1,000 இடங்கள் வரை நிரம்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்றைய கவுன்சிலிங் முடிந்தபின், காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை தெரியவரும்.

அதிகபட்சமாக, இ.சி.இ., பிரிவை, 22 ஆயிரத்து, 341 பேரும், மெக்கானிக்கல் பிரிவை, 20 ஆயிரத்து, 667 பேரும் தேர்வு செய்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை, 16 ஆயிரத்து, 305 பேரும், சிவில் பிரிவை, 10 ஆயிரத்து, 429 பேரும் தேர்வு செய்துள்ளனர். சிவில் தமிழ் பிரிவில், 325 இடங்களும், மெக்கானிக்கல் தமிழ் பிரிவில், 334 பேரும் சேர்ந்துள்ளனர்.

ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 807 மாணவர்களை அழைத்ததில், 99 ஆயிரத்து, 457 பேர், பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். 33 ஆயிரத்து, 40 பேர், கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. மேலும், 308 பேர் கவுன்சிலிங்கிற்கு வந்து, பொறியியல் படிப்பில் சேராமல் சென்றுவிட்டனர். இரண்டு மாணவர்கள், தங்களது ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us