தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடர்ந்து முன்னிலை வகித்த இ.சி.இ. பிரிவு

தொடர்ந்து முன்னிலை வகித்த இ.சி.இ. பிரிவு

தொடர்ந்து முன்னிலை வகித்த இ.சி.இ. பிரிவு


UPDATED : ஆக 11, 2011 12:00 AM

ADDED : ஆக 11, 2011 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2011 12:00 AM ADDED : ஆக 11, 2011 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதிகமான மாணவர்கள் சேரும் பாடப்பிரிவாக முன்னிலை வகித்த இ.சி.இ. பாடப்பிரிவு, பொதுப்பிரிவு கலந்தாய்வு முடியும் வரை அதே நிலையில் இருந்து தற்போது 22,807 மாணவர்களுடன் அதிக மாணவர்கள் சேர்ந்த பாடப்பிரிவாக உள்ளது.

இரண்டாவது இடத்தில், மெக்கானிக்கல் இன்ஜியிரிங் பாடப்பிரிவு உள்ளது. இதில் 21,243 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 97 மாணவிகள் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயோ-டெக்னாலஜி பாடப்பிரிவில் மொத்தமுள்ள 1159 இடங்களில் இதுவரை 802 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 220 பேர் மாணவர்கள், 582 பேர் மாணவிகளாவர்.

ஏரே-நாட்டிகல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 1619 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 1302 பேர் மாணவர்கள், 317 பேர் மாணவிகளாவர்.

மாணவிகள் மிகக் குறைவாக சேர்ந்துள்ள பாடப்பிரிவாக ஆட்டோமொபைல் உள்ளது. இதில் மொத்தம் சேர்ந்துள்ள 757 பேரில் 3 பேர் மட்டுமே மாணவிகள்.

சிவில் இன்ஜினியரிங்கில் 10869 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களில் 8341 பேர் மாணவர்கள், 2528 பேர் மாணவிகள்.

தமிழ் மீடியம் சிவில் இன்ஜினியரிங்கில் 348 பேர் சேர்ந்துள்ளனர். அதில் 160 பேர் மாணவர்கள், 188 மாணவிகள் ஆவர்.

தமிழ் மீடியம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் மொத்தம் 370 பேர் சேர்ந்துள்ளனர். இதரப் பாடப்பிரிவுகளில் மொத்தமுள்ள 5035 இடங்களில் இதுவரை 3823 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.

மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ள மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில், இதுவரை 19176 பேர் சேர்ந்துள்ளனர். இதில் வெறும் 90 மாணவிகள் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர்.

மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ள இ.சி.இ. பாடப்பிரிவில் 21152 பேர் சேர்ந்துள்ளனர். அதிக சேர்க்கை நடந்துள்ளப் பாடப்பிரிவாகவும் இ.சி.இ. பாடப்பிரிவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us