தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கிடையாது

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கிடையாது

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கிடையாது


UPDATED : ஆக 12, 2011 12:00 AM

ADDED : ஆக 12, 2011 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2011 12:00 AM ADDED : ஆக 12, 2011 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதன்படி, தமிழகம் உட்பட 15 மாநிலங்களில், ஆசிரியர் கல்வி படிப்பிற்கு புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது என என்.சி.டி.இ., அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, &'வரும் 2012 - 13ம் கல்வியாண்டில், புதிதாக ஆசிரியர் கல்வி படிப்புகளை துவங்க திட்டமிட்டுள்ள நிறுவனங்கள் அங்கீகாரம் கேட்டு ஆக.1ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிங் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இதற்கிடையே, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் தேவைகள் குறித்து, அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அதுகுறித்த விவரங்களை என்.சி.டி.இ. திரட்டியுள்ளது. பல மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருப்பதாகவும், எனவே புதிதாக ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, ஆந்திரா, குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிய கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது. மேலும், ஏற்கனவே இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில், கூடுதல் இடங்கள் அனுமதியும் வழங்கப்பட மாட்டாது. இந்த கட்டுப்பாடுகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. என்.சி.டி.இ. எடுத்துள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதுதான்&' என்று என்.சி.டி.இ., அறிவித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட மாநிலங்கள்
1.
ஆந்திரா, 2. டாமன் - டையூ, 3. குஜராத், 4. அரியானா, 5. இமாச்சலபிரதேசம், 6. கர்நாடகா, 7. கேரளா, 8. மத்தியப்பிரதேசம், 9. மகாராஷ்டிரா, 10. புதுச்சேரி, 11. பஞ்சாப், 12. ராஜஸ்தான், 13. தமிழ்நாடு, 14. உத்தரப்பிரதேசம், 15. உத்தரகண்ட்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us