தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் ஆங்கில வழி பள்ளிகளில் பழைய பாடத்திட்டங்கள்

தனியார் ஆங்கில வழி பள்ளிகளில் பழைய பாடத்திட்டங்கள்

தனியார் ஆங்கில வழி பள்ளிகளில் பழைய பாடத்திட்டங்கள்


UPDATED : ஆக 12, 2011 12:00 AM

ADDED : ஆக 12, 2011 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2011 12:00 AM ADDED : ஆக 12, 2011 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற புத்தகங்களை பயன்படுத்தாமல் இருப்பது, நீதிமன்ற தீர்ப்பின்படி குற்றமாகாது என்பதாலும் இந்த முடிவை மெட்ரிக் பள்ளிகள் தைரியமாக எடுத்துள்ளன.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் தரப்பில் கூறப்படுவதாவது, "நாங்கள் பின்பற்றிய பழைய பாடத்திட்டங்களே, சமச்சீர் பாடப்புத்தகங்களைவிட தரமானதாக உள்ளன. எனவே, விடுபட்ட பகுதிகளை மட்டும் சேர்த்துக்கொண்டு பாடத்திட்டம் பின்பற்றப்படும். ஏனெனில், ஆங்கில வழி கல்விக்கான அரசு பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதும் முக்கிய காரணம்.

மேலும், பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியம் என்பது, 2009 - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட அமைப்பு அல்ல. எனவே பழைய பாடத்திட்டங்களைப் பின்பற்றுவதில் பிரச்சினையில்லை" என்கின்றனர்.

பள்ளிகளின் தனி அடையாளங்கள் நீங்குமா?

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் மாநிலக் கல்வி வாரியம் என்ற 4  பிரிவு கல்வி வாரியங்களும், சமச்சீர் கல்வி திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்படும் என்ற திட்டம் இருந்தாலும், தங்களின் தனி அடையாளங்களை துறக்க, தனியார் பள்ளிகள் மறுத்து வருகின்றன.

"ஒரே கல்வித்திட்டம் மற்றும் ஒரே தேர்வுமுறை என்பதுதான் சமச்சீர் கல்வித்திட்டமே ஒழிய, ஆங்கிலப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என்ற எங்களின் அடையாளங்களை இழக்க மாட்டோம். அத்தகைய ஒரு  பரிந்துரையை கடுமையாக எதிர்ப்போம்" என்று அப்பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us