தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வங்கித்துறையில் 6 லட்சம் வேலை வாய்ப்பு

வங்கித்துறையில் 6 லட்சம் வேலை வாய்ப்பு

வங்கித்துறையில் 6 லட்சம் வேலை வாய்ப்பு


UPDATED : ஆக 16, 2011 12:00 AM

ADDED : ஆக 16, 2011 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2011 12:00 AM ADDED : ஆக 16, 2011 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவைப்புதூர் பிரிவிலுள்ள ஸ்ரீ.ஜி., கலை,அறிவியல் கல்லூரியில், "கலை, அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு", எனும் கருத்தரங்கு நடந்தது.

கல்லூரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஆர்.பி.டி.சி.,) முதன்மை மேலாளர் ஹரிஹரன் பேசியதாவது: வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்குவதில், பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. சேமிப்பு கணக்கு துவங்குவதன் மூலம், வங்கியின் செயல்பாடுகளை அறிந்து கொள்வது எளிதாகும். மாணவர்கள், தாங்கள் படிக்கும் காலத்திலேயே சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும்; சேமிக்கும் பழக்கமும் ஏற்படும். வரும் ஆண்டில், 73 ஆயிரம் கிராமங்களில், புதிய வங்கி கிளைகள் துவங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு கிளையிலும் குறைந்தபட்சம் 6 முதல் 8 பேர் பணியில் அமர்த்தப்படுவர். வரும் ஐந்தாண்டுகளில், வங்கித்துறையில் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனை பெற, இளைஞர்கள் கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு ஹரிஹரன் பேசினார். 

இன்சூரன்ஸ் நிறுவனத்தின், காப்பீடு வளர்ச்சி அதிகாரி கோபாலசாமி ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீடு குறித்து பேசுகையில், "பொதுமக்களில் 67 சதவீதம் பேருக்கு, இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு கிடையாது. வரும் காலங்களில், இன்சூரன்ஸ் துறையில் அதிகளவு வேலைவாய்ப்பினை பெறலாம். இவ்வாய்ப்பினை பெற, ஐ.ஆர்.டி.ஏ., தேர்வினை எழுதி, வெற்றி பெறவேண்டும். இதற்கான பயிற்சிகள் மையம் மூலமாகவும், ஆன்லைன் கோர்ஸ் மூலமாகவும் நடக்கிறது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us