UPDATED : ஆக 16, 2011 12:00 AM
ADDED : ஆக 16, 2011 05:33 PM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்பிரிவு மாணவர்களுக்கு ஏற்கனவே முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்டது.
இறுதிகட்ட கலந்தாய்வு ஆகஸ்ட்
16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன், 2 மணி நேரத்திற்கு முன்பாக அண்ணா பல்கலை வளாகத்திற்கு வர வேண்டும்.கலந்தாய்வில் பங்கேற்பதற்கு முன்பு ரூ
.5000 முன் பணமாக செலுத்த வேண்டம். எஸ்.சி./எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவராக இருப்பின் ரூ.1000 செலுத்த வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் அண்ணா பல்கலை இணையதளத்தில் http://www.annauniv.edu/tnea2011 காலியிட நிலவரத்தைப் பார்த்துக் கொண்டு வர வேண்டும் என்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.தற்போது
, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏதும் இல்லை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஓசி, பிசி, எம்பிசி, எஸ்சி பிரிவுகளில் குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன.கலந்தாய்விற்கான கட்
-ஆப் நிலவரத்தை அறிந்து கொள்ள http://kalvimalar.dinamalar.com/tamil/news-details-eng.asp?cat=2&id=27 இணைப்பைப் பார்க்கவும்.