தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 22ல் துவங்கும்

காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 22ல் துவங்கும்

காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 22ல் துவங்கும்


UPDATED : ஆக 18, 2011 12:00 AM

ADDED : ஆக 18, 2011 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2011 12:00 AM ADDED : ஆக 18, 2011 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வுக்குரிய பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் என்றும் தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த கல்வியாண்டில் சமச்சீர் பாடத் திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஏற்பட்ட பிரச்சினையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கவே ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஆகிவிட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வை எவ்வாறு நடத்துவது என்று பள்ளிகள் குழப்பமடைந்தன. இந்த காலாண்டுத் தேர்வுக்குள் மிகக் குறைவான பாடங்களை மட்டுமே நடத்தி முடிக்க முடியும் என்பதால் பொதுவாக காலாண்டுத் தேர்வுக்கு என ஒதுக்கப்படும் பாடங்களை விட குறைவான பாடங்களை ஒதுக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

என்னதான் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தினாலும் ஒரு மாத காலத்திற்குள் அதிகமான பாடங்களை நடத்த முடியாது என்பதால், தேர்வுக்குரிய பாடப்பகுதிகளை குறைக்க தமிழக அரசும் திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us