UPDATED : ஆக 18, 2011 12:00 AM
ADDED : ஆக 18, 2011 02:36 PM
அமெரிக்காவின் புறநகர் கிராமங்களுக்கு சுற்றுலா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, கிராமம் ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
உரையின் போது, நம் நாட்டின் அடிப்படைக் கல்வியை மாற்றி அமைக்க வேண்டும். கணிதம் மற்றும் அறிவியலில் இந்தியா, சீனாவைப் பின்பற்ற வேண்டும். அறிவியல் படித்தால் நீங்கள் விஞ்ஞானியாகலாம், கணிதம் படித்தால் பொறியாளராகலாம். மேலோட்டமான படிப்பு எதற்கும் உதவாது.
வெளிநாட்டு மொழிகளைப் படித்தால், பெரிய நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்புகளைப் பெறலாம். எப்படி எனில், தற்போது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் வளர்ந்து வருகிறது. பிரெஞ்ச், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாட்டு மொழிகளை நீங்கள் படித்தால், அந்நாட்டுடன் வணிகத் தொடர்பு வைக்கும் நிறுவனங்களில் உங்கள் மொழி ஆற்றலுக்காக வேலை கிடைக்கும். அவர்களது வெளிநாட்டு வணிகத்திற்கு உங்களது மொழி ஆற்றல் நிச்சயம் பேருதவியாக இருக்கும் என்பதால் நல்ல பதவிகள் தேடி வரும். எனவே, பிறநாட்டு மொழிகளை படியுங்கள் என்று ஒபாமா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
