தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்பத்தால் முன்னேற்றமடையும் தொலைநிலைக் கல்வி

தொழில்நுட்பத்தால் முன்னேற்றமடையும் தொலைநிலைக் கல்வி

தொழில்நுட்பத்தால் முன்னேற்றமடையும் தொலைநிலைக் கல்வி


UPDATED : ஆக 19, 2011 12:00 AM

ADDED : ஆக 19, 2011 02:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2011 12:00 AM ADDED : ஆக 19, 2011 02:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பின்னடைந்த மற்றும் வளரும் நாடுகளில், கல்வியை அனைத்து பகுதிகளுக்கும், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கொண்டு செல்வதில் பலவித சவால்கள் உள்ளன. கல்விக்கூடங்களுக்கு நேரடியாக வருவது அனைத்து மக்களுக்கும் சாத்தியமான விஷயமாக இருப்பதில்லை. அப்படியே வந்தாலும், உயர்கல்வி வரை தொடர்ச்சியாக அனைவரும் வருகிறார்களா? என்றால், பாதிக்குமேல் வருவதில்லை என்றே கூறலாம். இதுபோன்ற சூழ்நிலையில்தான் தொலைநிலைக் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது.

உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், இன்றைய நிலையில், தொலைநிலைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். கல்வி சமநிலையை அடைவதில், தொலைநிலைக் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் கவனிக்கத் தவறுவதில்லை. உயர்கல்வி என்ற நிலையில், தொலைநிலைக் கல்விமுறையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கிறது.

பின்னடைந்த மற்றும் வளரும் நாட்டு அரசாங்கங்களுக்கு, தரமான உள்கட்டமைப்பு மற்றும் சிறப்பான வகையில் கூடிய அனைத்து வசதிகளுடன் கல்வி நிறுவனங்களை அனைத்து இடங்களிலும்(முக்கியமாக, கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கியப் பகுதிகள்) கட்டுவது சிரமமான காரியமாக இருக்கிறது. எனவே, இத்தகைய சூழலில், தொலைநிலைக் கல்வியின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியவருகிறது.

தொழில்நுட்ப பயன்பாடு

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இக்கால கட்டத்தில், தொலைநிலைக் கல்வியின் வளர்ச்சிக்கு அந்த தொழில்நுட்பம் சிறந்தப் பயன்பாட்டை அளிக்கும். இந்த தொழிநுட்பத்தின் மூலம் கிராமப்புற மற்றும் தொலைதூர மாணவர்களை கல்வியின்பால் எளிதாக ஈர்க்க முடியும்.

கணினி மற்றும் இணையப் பயன்பாடுகளின் அதிகரிப்பானது, கல்வி உலகில் ஒரு புதியப் புரட்சியை உண்டாக்கியுள்ளது. பெரும்பாலான மாணவர்கள், வகுப்பறைகளின் நான்கு சுவர்களுக்கு வெளியில்தான் கல்வி கற்கிறார்கள்.

இந்திய உயர்கல்வி அமைப்பில், 375 பல்கலைக்கழகங்கள், 18,064 கல்லூரிகள், 4.92 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 1 கோடியே 40 லட்சம் மாணவர்கள் உள்ளனர். உலகிலேயே பெரிய கல்வி குழுமங்களில் ஒன்றைக் கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், படிப்பறிவில்லாதவர்களும் அதிகம் உள்ளனர். இந்த உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், தொலைநிலைக் கல்வித் திட்டமானது, சுமார் 24% பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்த அளவை அடுத்த 2012ம் ஆண்டில் 40 சதவீதமாக மாற்ற இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இக்னோ(Indira Gandhi National Open University) எனப்படும் ஒரே ஒரு தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது. மாநிலங்கள் தத்தமது மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளன.

இன்றைய தேவையைக் கருத்தில்கொண்டு, பல தனியார் தொலைநிலைக் கல்வி வழங்கும் நிறுவனங்களும் அதிகளவில் தோன்றியுள்ளன. அதேசமயம் இந்த தொலைநிலைக் கல்வி திட்டத்தில் முறையான விதிமுறைகளும், செயல்திட்டங்களும் இல்லாததால், தரம் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பான சிக்கல்களை தொலைநிலைக் கல்வி மாணவர்கள் அவ்வப்போது எதிர்நோக்குகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us