UPDATED : ஆக 20, 2011 12:00 AM
ADDED : ஆக 20, 2011 12:56 PM
தொலைநிலைக் கல்வியை மேற்கொள்ள, ஒரு குறிப்பிட்ட பல்கலையைத் தேர்ந்தெடுக்கும் முன்பாக, பல அம்சங்களை யோசிக்க வேண்டும். அத்தகைய அம்சங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு விரிவான அலசல். உபகரணங்களின் தரம் தொலைநிலைக் கல்விக்கு உபகரணங்கள்தான் மிகவும் முக்கியம். இவைதான் அறிவிற்கான அடிப்படை ஆதாரங்கள். இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலையானது, ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு முறையும், முழு பாடத்திட்டத்தையும் திருத்தியமைக்கிறது. பாடத்திட்டங்களுக்கான, துணைப் பாடப் புத்தகங்கள் எளிதாக கிடைப்பதும் முக்கியம். இவற்றை யோசித்தப் பிறகே, கல்வி நிறுவங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். விரைவாக பதிலளித்தல் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விரைவாக பதிலளிப்பதில், பொதுவாகவே, தனியார் கல்வி நிறுவனங்கள் நன்றாகவே செயல்படுகின்றன. ஒரு பாடத்தை தேர்வுசெய்யும்போது, உங்களின் சந்தேகங்களுக்கு எப்படி பதிலளிக்கிறார்கள் மற்றும் எவ்வாறு ஆலோசனைத் தருகிறார்கள் என்பதை நிச்சயம் கவனிக்க வேண்டும். உங்களின் மனதை மாற்றுவதில், கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் ஒன்றுக்கொன்று மாறுபடும். நீங்கள் உங்கள் சந்தேகத்திற்கு பதில் வேண்டி, ஒரு கேள்வியை மின்னஞ்சல் மூலமாக கேட்டு, அதற்கு பதிலளிக்க ஒரு கல்வி நிறுவனம் சில நாட்களை எடுத்துக்கொண்டால், அந்த நிறுவனத்தை விட்டு விலகுவதே சிறந்தது. சிக்கலற்ற தேர்வு மதிப்பீட்டு செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட ஒரு பல்கலை பொறுப்பேற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். இதுமட்டுமின்றி, தேர்வு திட்டமிடல்கள் கடுமையான முறையில் இல்லாமல், நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் வெளியிடப்பட வேண்டும். மாணவர் வசதிக்கேற்ப தேர்வுகளை திட்டமிட்டு நடத்துதல் வேண்டும். ஆன்லைன் உதவி நீங்கள் முடிவெடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டிய முக்கிய விஷயம் இது. பல கல்லூரிகள், முழு பாட உபகரணங்களையும் ஆன்லைனில் வழங்குகின்றன. கல்வி நிறுவனங்கள் வழங்கும் கற்றல் மேலாண்மை அமைப்பானது(
மாணவர்களுக்கான வசதிகள்
பாட உபகரணங்கள், அசைன்மெண்ட்டுகள் மற்றும் ப்ராஜெக்ட் பணி சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஆன்லைன் உதவி, வேலைவாய்ப்பு உதவி, ஒலி-ஒளி முறையிலான கற்றல் உதவிகள் மற்றும் மின்னணு கற்றல் வசதிகள், வெற்றிகரமான தொலைநிலைக் கல்வி அனுபவத்தைத் தரக்கூடிய IVRS வசதி போன்றவை இருந்தால், அதை சிறப்பான கல்வி நிறுவனம் எனலாம்.
ஸ்டடி சென்டர்
ஒரு பல்கலையில் தொலைதூரக் கல்வியில் சேரும் முன்பாக, அதன் ஸ்டடி சென்டர், உங்களின் இல்லம் அல்லது அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறதா? என்பதை கவனித்தல் நல்லது. மேலும் அதில் பணியாற்றும் ஆசிரியர்களின் தரம் மற்றும் அனுபவம், அந்த மையத்தின் வசதிகள் ஆகியவைப் பற்றியும் நோக்க வேண்டும். சில மையங்கள் அளவுக்கு அதிகமான மாணவர்களை அனுமதிக்கின்றன. எனவே, மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்தை கவனிக்க வேண்டியதும் முக்கியம். 1:60 என்ற அளவில் விகிதாச்சாரம் இருந்தால், அது ஏற்புடையது. பகுதிநேர ஸ்டடி சென்டர் ஆலோசகர்களை நம்ப வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு தேவையான சமயத்தில் அவர்களை அணுக முடியாது.
ஆய்வகம் மற்றும் நூலக வசதி
தொலைநிலைக் கல்வியில் விஷ¤வல் கம்யூனிகேஷன்ஸ், அறிவியல் பாடங்கள், பொறியியல் பாடங்கள் மற்றும் பேஷன் டிசைன் உள்ளிட்ட பாடங்களை படிக்கையில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில், தேவையான ஆய்வகம் மற்றும் நூலக வசதிகள் இருக்கிறதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். இல்லையெனில், உங்களின் படிப்பு நிறைவடையாது.
ஆசிரியர்களின் தரம்
ஸ்டடி சென்டர் ஆசிரியர்களின் தரத்தை மதிப்பிடுவது என்பது ஆரம்பத்தில் சற்று சிக்கலான பணிதான். குறிப்பிட்ட கல்லூரி அல்லது பல்கலையில், தொலைதூரக் கல்வியில் சேரும் முன்பாக, அவற்றின் ஸ்டடி சென்டர் சென்று, அதன் ஆசிரியர்களுடன் உரையாடலாம் மற்றும் விவரக் குறிப்பேடுகளில் அவர்களின் கல்வித் தகுதிகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். சீனியர் மாணவர்களைப் பார்த்தால், அவர்களிடமும் அதைப் பற்றி விசாரிக்கலாம்.
பாட அங்கீகாரம்
தொழில்நுட்பம் தொடர்பான கல்விக்கு இந்த அங்கீகாரம் மிகவும் முக்கியம். உதாரணமாக, தொலைநிலைக் கல்வியில் MBA படித்தால், அப்படிப்பிற்கு AICTE அங்கீகாரம் உள்ளதா என பார்க்க வேண்டும். B.Ed படித்தால் அப்படிப்பிற்கு NCTE அங்கீகாரம் உள்ளதா என பார்க்க வேண்டும். அதேசமயம் திறந்தநிலை பல்கலைப் படிப்பில், இதுபோன்ற அமைப்புகளின் அங்கீகாரம் இல்லாமலும், இத்தகைய படிப்புகள் வழங்கப்படலாம். குறிப்பிட்ட படிப்புகளுக்கு முறையான அங்கீகாரம் இருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
படிப்பிற்கான செலவு
ஒரு படிப்பிலோ அல்லது ஒரு கல்வி நிறுவனத்திலோ சேரும் விஷயத்தில், கட்டணம் முக்கிய இடம் பெறுகிறது. கட்டணம் மிக முக்கிய அம்சம் என்றாலும், அதை வைத்து மட்டும் நாம் அனைத்தையும் முடிவுசெய்துவிடக் கூடாது. அந்தக் கல்வி நிறுவனத்தில் ஏற்கனவே படித்தவர்களிடம், பாட உபகரணங்கள், ஆசிரியர்களின் தரம், கேள்விகளுக்கு பதிலளிக்கும் தன்மை, ஆன்லைன் வசதிகள், ஆய்வகம் மற்றும் நூலக வசதிகள், தேர்வு நடைமுறைகள் ஆகிய அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்வதும் முக்கியம். கட்டணம் மட்டுமே இறுதியானதல்ல.
