தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.யு.சி.என். உறுப்பினராக இணைப் பேராசிரியர்

ஐ.யு.சி.என். உறுப்பினராக இணைப் பேராசிரியர்

ஐ.யு.சி.என். உறுப்பினராக இணைப் பேராசிரியர்


UPDATED : ஆக 20, 2011 12:00 AM

ADDED : ஆக 20, 2011 05:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2011 12:00 AM ADDED : ஆக 20, 2011 05:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியமான ஐ.யு.சி.என்., உறுப்பினராக  மதுரை காமராசர் பல்கலைக்கழக, தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் சு.நாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த ஒன்றியம், உலகின் மிகப்பழைமையான மற்றும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக ஊடகத்துறை வாயிலாக சுற்றுச்சூழல், எச்.ஐ.வி.,/எய்ட்ஸ், சுகாதாரம், தொடர்பியல் மற்றும் கல்வி தொடர்பாக பணியாற்றிய டாக்டர் நாகரத்தினம், இந்த ஒன்றியத்தின் கல்வி மற்றும் தொடர்பியல் ஆணைய அமைப்பின் வாயிலாக உறுப்பினர் பதவிக்கு நியமனம் ஆகியுள்ளார்.

இந்த அமைப்பில் ஏராளமான தன்னார்வ மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். அறிவியல் ஆராய்ச்சி, களப்பணித் திட்டங்கள் ஆகியவற்றின் வாயிலாக, அரசு, அரசு சாரா அமைப்புகள், ஐ.நா., அமைப்புகள்,  நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து கொள்கை, சட்டங்கள் மற்றும் சிறப்பான நடைமுறைகளை உருவாக்குவதை இந்த ஒன்றியம் சர்வதேச அளவில் ஊக்குவிக்கிறது.

இந்நியமனம் வாயிலாக டாக்டர் நாகரத்தினம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், சமூகம் மற்றும் நிறுவனங்கள் மாற்றங்களை ஏற்படுத்துதல், நிபுணத்துவ பகிர்தல் வழியாக நீடித்த வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு உதவுதல், பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவோருக்கு இயற்கை பாதுகாப்பு வழிக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என கல்வி மற்றும் தொடர்பியல் ஆணையம் அனுப்பிய தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us