தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு

கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு

கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு


UPDATED : ஆக 24, 2011 12:00 AM

ADDED : ஆக 24, 2011 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2011 12:00 AM ADDED : ஆக 24, 2011 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அனைத்துக் கல்லூரி மாணவர்கள், இன்று வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்துப் பேசிய சட்டப்பல்கலைக்கழகம், டி.பி.ஜெயின் மற்றும் லயோலா கல்லூரிகளின் மாணவர் பிரதிநிதிகள் கூறியதாவது: அமைதியான முறையில், ஊழல் குறித்து, பைக் பேரணியின் மூலம் விழிப்புணர்வு செய்யச் சென்ற, டி.பி.ஜெயின் கல்லூரியின் ஆயிரக்கணக்கான மாணவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். அதே போல, லயோலா கல்லூரியில் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட இருந்த மாணவர்களை வகுப்பறைக்குள் அடைத்து, மாணவர்களை வெளியே விட மறுத்தனர்.

மாணவர்களின் போராட்டத்தை நசுக்குவதற்கான எல்லா வழிகளிலும் கல்லூரி நிர்வாகமும், காவல் துறையும் ஈடுபடுகின்றன. ஆனால், எங்களின் அமைதிப் போராட்டத்தைத் தடுக்க முடியாது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், எல்.பி. சாலையில், உண்ணாவிரதம் இருக்கும் 35 பேருக்கு ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

அது போல், இன்று வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். சென்னையில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்கள், அடையாறு பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்து, பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக திருவான்மியூர் எல்.பி.சாலையில் உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்குச் சென்று, போராட்டம் நடத்த இருக்கிறோம். ஊழலுக்கு எதிராக, மாணவர்கள் போராடுவது, எங்களின் ஜனநாயகக் கடமை. அதை மீறி, மாணவர்கள் ஒன்றிணைவதைத் தடுக்க நினைத்தால், போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும்.பின்னர், மாணவர்களும் சாகும் வரை போராட்டம் நடத்த வேண்டிய சூழல் வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us