தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் பாலியல் கொடுமையை தடுக்க விசாரணைக் குழு

கல்லூரிகளில் பாலியல் கொடுமையை தடுக்க விசாரணைக் குழு

கல்லூரிகளில் பாலியல் கொடுமையை தடுக்க விசாரணைக் குழு


UPDATED : ஆக 24, 2011 12:00 AM

ADDED : ஆக 24, 2011 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2011 12:00 AM ADDED : ஆக 24, 2011 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லூரிகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிக்க, அனைத்துக் கல்லூரிகள் மற்றும் துறைகளில் விசாரணைக் குழு அமைக்க தமிழக சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

புகார் குறித்த விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று பெண்கள் வேலைக்கு செல்வது சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. ஆனால் அதற்கேற்ப அவர்கள் பணிபுரியும் இடங்கள் சாதாரணமானதாக இல்லை. மேலதிகாரிகள், சக ஊழியர்களின் பாலியல் கொடுமைகளை சகித்துக் கொண்டு பணிபுரிய வேண்டிய கட்டாயம் பல அலுவலகங்களில் உள்ளது.

அலுவலகங்கள் மட்டுமல்ல, பல பள்ளி, கல்லூரிகளிலும் இதே நிலைமைதான் உள்ளது. ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களின் வக்கிரங்களுக்கு பணிந்து போக வேண்டிய பரிதாப நிலைமையில் பல மாணவிகள் சிக்கியுள்ளனர்.

பதவி உயர்வு, தேர்வில் வெற்றி, குடும்ப பொருளாதார நிலைமை உள்ளிட்ட காரணங்களால் பல பெண்கள் வெளியில் சொல்ல முடியாமல் புழுங்கியபடி உள்ளனர். ஆனால் எந்த நிர்பந்தங்களும் இல்லாத பிஞ்சுக் குழந்தைகளும் இந்த வக்கிரங்களுக்கு இரையாவதுதான் பரிதாபம்.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த விசாகா பாலியல் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் மேலதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகளில் விசாரணைக் குழு அமைக்க, கல்லூரி கல்வி இயக்குனர் உமாராணி அறிவுறுத்தியுள்ளார்.

புகார் அளிப்பவரின் பெயரையோ அல்லது எழுத்து மூலமான கடிதத்தையோ புகார்தாரரிடம் புகார் குழு வலியுறுத்தக் கூடாது.

ஒவ்வொரு துறை தலைமை அலுவலர்களும், பாலியல் தொந்தரவு குறித்த மாதாந்திர அறிக்கையை சமூக நல துறைக்கு(மகளிர் நலம் 2) மாதந்தோறும் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us