UPDATED : ஆக 24, 2011 12:00 AM
ADDED : ஆக 24, 2011 11:54 AM
அ நிறம் | அளவு
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பள்ளிக்கல்வி துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், ஏழ்மை இல்லாத உலகினை உருவாக்கலாம் என ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய தலைநகர் சியோலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பான் கீ மூன் பேசியதாவது: ஐந்து வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவது கட்டாயமாக்கப்படுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு நடந்தால் உலகில் நிலவும் வறுமையை இல்லாமல் ஆக்கலாம் என அவர் தெரிவித்தார்.
