தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுகலை பொறியியல் சேர்க்கை விவரம்

முதுகலை பொறியியல் சேர்க்கை விவரம்

முதுகலை பொறியியல் சேர்க்கை விவரம்


UPDATED : ஆக 25, 2011 12:00 AM

ADDED : ஆக 25, 2011 02:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2011 12:00 AM ADDED : ஆக 25, 2011 02:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.ஆர்க்., பி.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் இடங்களுக்கும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவ சேர்க்கையை அண்ணா பல்கலைக் கழகம் கலந்தாய்வு மூலம் நடத்தி வருகிறது.

இதற்கான கலந்தாய்வு கடந்த 20ம் தேதி துவங்கியது. கடந்த 5 நாட்களில் 5135 மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இதில், 1923 மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், 688 பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், 2524 மாணவர்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் சேர்க்கை பெற்றுள்ளனர்.

கலந்தாய்வின் இறுதி நாளான இன்று, மொத்தம் 4106 இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலையில் 983 இடங்களும், அரசு கல்லூரிகளில் 206 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2917 இடங்களும் காலியாக உள்ளன.

ஆகஸ்ட் 25ம் தேதியுடன் முதுகலை பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us