தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைநிலைப் படிப்பு தொடர்பாக தெரிந்திருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

தொலைநிலைப் படிப்பு தொடர்பாக தெரிந்திருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

தொலைநிலைப் படிப்பு தொடர்பாக தெரிந்திருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்


UPDATED : ஆக 26, 2011 12:00 AM

ADDED : ஆக 26, 2011 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2011 12:00 AM ADDED : ஆக 26, 2011 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்நிலையில், தாங்கள் மேற்கொள்ளும் படிப்பின் எதிர்கால வாய்ப்புகள், மதிப்பு, தரம் மற்றும் அவற்றுக்கு இருக்க வேண்டிய அங்கீகாரம் போன்றவை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை முறையாக தெரிந்துகொண்டு சேர்ந்தால்தான், நமது உழைப்பிற்கும், பணத்திற்கும், நாம் செலவழிக்கும் காலத்திற்கும் பிரயோஜனம் இருக்கும். அத்தகைய அம்சங்கள் பின்வருமாறு,

அங்கீகாரம்

கடந்த 2005, மார்ச் 1ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், தொலைதூரக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு, வழங்கப்படும் அனைத்து தொழில்முறைசாரா படிப்புகளும், வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி பெறுவதற்கு தகுதியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்முறை சாரா பட்டங்களுக்கு மட்டும் என்பதை கவனிக்க வேண்டும்.

தொழில்முறை(Professional) படிப்புகள்

மருத்துவப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்க முடியாது. மற்ற தொழில்முறை படிப்புகளுக்கு(உ.ம்-MBA மற்றும் B.Ed), சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளின் அங்கீகாரம் இருக்க வேண்டும்.

B.Ed. படிப்பு

இந்தப் படிப்பிற்கு கட்டாயம் NCTE அங்கீகாரம் இருக்க வேண்டும். எனவே, NCTE இணையதளத்தில், அதன் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் பெயர்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

B.Tech. அங்கீகாரம்

அரசு உத்தரவை பொறுத்தவரை, தொலைநிலைக் கல்விமுறையிலான B.Tech. படிப்பிற்கு அங்கீகாரம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை.

வெளிநாட்டு பல்கலை அங்கீகாரம்

அங்கீகரிக்கப்பட்ட திறந்தநிலை பல்கலைகளின் பட்டங்கள், பெரும்பாலான வெளிநாட்டு பல்கலைகளால் அங்கீகரிக்கப்படுகின்றன. உங்களுக்கு வெளிநாட்டு கல்லூரியில் படிக்கும் எண்ணம் இருந்தால், நீங்கள் சேர நினைக்கும் கல்வி நிறுவனம், இந்தியாவில் அங்கீகரித்திருக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை சரிபார்க்கவும். மேலும், நீங்கள் இங்கே சேர விரும்பும் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் பதிவாளரிடம் சென்று, அக்கல்வி நிறுவனத்தின் தொலைநிலைப் பட்டமானது, வெளிநாட்டில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை சரிபார்க்கலாம்.

பிராந்திய சூழல்கள்

ஒரு தொலைநிலைக் கல்வி பட்டப்படிப்பை இந்தியாவில் ஒரு குடிமகன் எந்த கல்வி நிறுவனத்தில் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அதேசமயம், சில மாநில கல்வி நிறுவனங்கள், பிற மாநிலங்களில் ஸ்டடி சென்டர்களை வைத்திருப்பதில்லை. அதேசமயம், ஸ்டடி சென்டர் இல்லையென்பதற்காக, உங்களின் படிப்பு பாதிக்கப்பட்டு விடும் என்றும் அர்த்தமல்ல.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us