UPDATED : ஆக 26, 2011 12:00 AM
ADDED : ஆக 26, 2011 10:53 AM
டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மருத்துவக் கல்வி அகாடமியின் தலைவர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் துணைத் தலைவர் டாக்டர் அஞ்சனா ஆகியோர் செய்தியாளர்களிடம் இது குறித்து விளக்கினர்.
வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த படிப்புகள் துவங்குகின்றன. மருத்துவர்கள் மட்டுமின்றி பிளஸ் 2, 10ம் வகுப்பு முடித்தவர்களும் இந்த படிப்பில் சேரலாம்.
எம்.டி. முடித்த மருத்துவர்களுக்கான ஓராண்டு படிக்கும் போஸ்ட் டாக்டோரல் ·பெலோஷிப் இன் டயபடாலஜி, பி.எஸ்ஸி. பட்டப்படிப்புகளை முடித்தோருக்கு ஓராண்டு கொண்ட போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் டயபடீஸ் எஜுகேஷன் படிப்பும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 3 ஆண்டுகள் கொண்ட பி.எஸ்ஸி., இன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி படிப்பும், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ இன் போடியாட்ரி படிப்பும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த படிப்புகள் அனைத்துமே தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் துவங்கப்படுகிறது.
இதனுடன் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான பிஸிஷியன் அசிசென்ட்ஷிப், ஆப்தால்மிக் (கண் மருத்துவம்) நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளும் தொடங்கப்படுகின்றன.
இந்த படிப்புகள் குறித்த விவரங்களை டாக்டர் மோகன்ஸ் டயபடிஸ் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
