தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச லேப்-டாப் பெறும் மாணவியர் குறித்த அரசாணை

இலவச லேப்-டாப் பெறும் மாணவியர் குறித்த அரசாணை

இலவச லேப்-டாப் பெறும் மாணவியர் குறித்த அரசாணை


UPDATED : ஆக 28, 2011 12:00 AM

ADDED : ஆக 28, 2011 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2011 12:00 AM ADDED : ஆக 28, 2011 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாணவ, மாணவியருக்கான இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்தில், ஆண்டு வாரியாக பயன்பெறும் மாணவ - மாணவியர் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை வெளியிட்ட அரசாணை: தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்-டாப் திட்டம், வரும் 15ம் தேதி முதல்வரால் துவக்கப்படும். இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்கள் என, நடப்பு நிதியாண்டில் 9.12 லட்சம் பேருக்கு, இலவச லேப்-டாப்கள் வழங்கப்படும். இதற்காக, நடப்பாண்டில், 912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, தமிழக எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன்(எல்காட்) மேற்கொள்ளும்.

இதில், கல்வியாண்டு வாரியாக பயன்பெறும் மாணவ, மாணவியர் விவரம்

கல்வி நிறுவனம் 2011-12 2012-13 2013-14: பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பிளஸ் 2 பிளஸ் 2

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் முதல் மற்றும் 3ம் ஆண்டு மூன்றாம் ஆண்டு -

பாலிடெக்னிக் கல்லூரிகள் முதல் மற்றும் 3ம் ஆண்டு முதல் மற்றும் 3ம் ஆண்டு முதலாம் ஆண்டுபொறியியல் கல்லூரிகள் இரண்டு மற்றும் 4ம் ஆண்டு இரண்டு மற்றும் 4ம் ஆண்டு.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

2013-14ல், அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் லேப்-டாப் பெற்று விடுவர் என்பதால், அதன்பின் கல்லூரியில் லேப்-டாப் வழங்க வேண்டிய தேவை இல்லை. அதேநேரம், 10ம் வகுப்பு முடித்து விட்டு, பாலிடெக்னிக் சேரும் மாணவர்களுக்கு மட்டும் முதலாமாண்டில், லேப்-டாப் வழங்கப்படும் என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us