UPDATED : ஆக 29, 2011 12:00 AM
ADDED : ஆக 29, 2011 10:47 AM
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் அலி அன்வர் பேசுகையில், மத்திய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சில மாதங்கள் அவ்வாறு நிரப்பப்படாமல் வைத்துவிட்டு பிறகு அவற்றைப் பொதுப் பிரிவுக்கு ஒதுக்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே இதை தவிர்க்க வேண்டும். இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் குறிப்பிட்ட பிரிவினரை நிரப்ப அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும் என்றார்.
