தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆளுமைத்திறன் வளர்த்தால், சாதிக்க முடியும்

ஆளுமைத்திறன் வளர்த்தால், சாதிக்க முடியும்

ஆளுமைத்திறன் வளர்த்தால், சாதிக்க முடியும்


UPDATED : ஆக 29, 2011 12:00 AM

ADDED : ஆக 29, 2011 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2011 12:00 AM ADDED : ஆக 29, 2011 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

""கல்வியோடு ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்,&'&' என, பாரதியார் பல்கலை ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய இயக்குனர் கூறினார்.

ஆலாந்துறை, இண்டஸ் இன்ஜினியரிங் கல்லூரியில், முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.

பாரதியார் பல்கலை அண்ணா ஐ.ஏ.எஸ்., அகாடமி பயிற்சி இயக்குனர் பத்மநாபன் தலைமை வகித்து பேசியதாவது: "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உச்சநிலையை அடைய கல்வி தான் பேராயுதம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கூட பலம் வாய்ந்ததல்ல; கல்வியில் சிறந்து விளங்கும் அறிவாளிகள் தான் அதிக பலம் வாய்ந்தவர்கள். அமெரிக்காவில் சிலிகான் பள்ளத்தாக்கில் பணியாற்றக்கூடிய 38 சதவீதம் பேர் இந்தியர்கள்.

மருத்துவத்துறையில் மட்டும் 5 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவிலுள்ள ஒட்டுமொத்த அறிவுஜீவிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள்; குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இதற்கு காரணம், தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்வியின் தரமாகும். இப்படி சர்வதேச அளவில் சாதிப்பதற்கு ஆளுமைத்தன்மைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, பத்மநாபன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us