UPDATED : ஆக 29, 2011 12:00 AM
ADDED : ஆக 29, 2011 01:57 PM
அ நிறம் | அளவு
பட்டப்படிப்பு தகுதியை உயர்த்திக் கொள்ள வயது வரம்பு ஒரு தடையில்லை என்று சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவாசகம் தெரிவித்தார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் 11வது ஆண்டு மாநில மாநாட்டில் பேசிய துணைவேந்தர் திருவாசகம், இங்கு நான் ஒரு துணைவேந்தராக வரவில்லை, நானும் ஒரு முன்னாள் ஆசிரியர் என்ற முறையில்தான் வந்துள்ளேன். என்னை இந்த அளவிற்கு உயர்த்திய எனது ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவைப் பெருக்கிக் கொள்ளவோ, பட்ட படிப்பு தகுதியை உயர்த்திக் கொள்ளவோ வயது வரம்பு இல்லை என்று கூறினார்.
