தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வியை ஏ.பி.எல். முறையில் கற்றுத்தர பயிற்சி

சமச்சீர் கல்வியை ஏ.பி.எல். முறையில் கற்றுத்தர பயிற்சி

சமச்சீர் கல்வியை ஏ.பி.எல். முறையில் கற்றுத்தர பயிற்சி


UPDATED : ஆக 30, 2011 12:00 AM

ADDED : ஆக 30, 2011 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2011 12:00 AM ADDED : ஆக 30, 2011 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் துவக்கக்கல்வியில், ஏ.பி.எல்., எனும் செயல்வழி கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், புத்தகத்தில் உள்ள பாடங்கள் அனைத்தும் தனித்தனி லேமினேஷன் செய்யப்பட்ட வண்ண அட்டைகளாக அச்சிடப்பட்டு, வகுப்பறை அலமாரியில் அடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவர்களும் தாங்களாகவே படித்துக்கொள்ளும் முறை இக்கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டாலும், அதை கொண்டு, வகுப்புகளில் பாடம் நடத்தப்படுவதில்லை. ஏனெனில், அதில் உள்ள பெரும்பாலான பாடங்கள் வண்ண அட்டைகளாக ஏ.பி.எல்., முறையில் ஏற்கனவே பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

எனவே, ஒரு மாணவன் தனது கற்றல் நேரத்துக்கு மட்டுமே புத்தகங்களை பயன்படுத்தும் சூழல் இருந்து வந்தது. தற்போது, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டு, அனைவருக்கும் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கக்கல்வி புத்தகங்களுக்கும், ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் ஏ.பி.எல்., அட்டையில் உள்ள பாடத்திட்டத்துக்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. ஏ.பி.எல்., முறையில் படிக்கும் மாணவர்களால், சுயமாக சமச்சீர் கல்வி புத்தகங்களை படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால், சமச்சீர் கல்வி புத்தகத்தை பாடமாக நடத்துவது குறித்து துவக்கக்கல்வி ஆசிரியர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், சமச்சீர் பாடத்தையும், ஏ.பி.எல்., முறையையும் இணைக்கும் விதமான பயிற்சியை பல கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர் ஒருவர் கூறியதாவது: ஏ.பி.எல்., முறையில் வழங்கப்பட்ட வண்ண அட்டைகளில், அடிப்படை வாசித்தலை கற்றுத்தரும் அட்டைகளில் மாறுதல் இருக்காது. பாடல்கள், பாடங்கள் என வரும் போது மட்டுமே, ஏ.பி.எல்., அட்டைக்கும், சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்துக்கும் வித்தியாசம் உள்ளது. இதை இணைக்கும் வகையில், சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் உள்ள செயல்பாடுகளை குழந்தைகளுக்கு செயல்படுத்துவது குறித்தும், அதில் உள்ள பாடங்களை ஏ.பி.எல்., முறையில் மாற்றம் செய்து, அதற்குரிய சாதனங்களை ஆசிரியர்களே தயார் செய்வது குறித்தும் பல்வேறு கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

முதல்கட்ட பயிற்சி கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இது குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சமச்சீர் கல்வி பாடத்தை, ஏ.பி.எல்., முறையில் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us