பி.எட். கலந்தாய்வு முடிந்தது; விரைவில் 2ம் கட்ட கலந்தாய்வு
பி.எட். கலந்தாய்வு முடிந்தது; விரைவில் 2ம் கட்ட கலந்தாய்வு
UPDATED : ஆக 31, 2011 12:00 AM
ADDED : ஆக 31, 2011 03:13 PM
தமிழகத்தில் உள்ள 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் மாணவர்களை சேர்க்க சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்கடன் கல்வியியல் கல்லூரயில் கலந்தாய்வு நடைபெற்றது.
பி.எட். படிப்பில் சேர மொத்தமுள்ள 2110 இடங்களுக்கான ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வு ஆகஸ்ட் 24ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெற்றது.
முதல்கட்ட கலந்தாய்வுக்கு 3020 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில் கடைசி 1,970 மாணவர்கள் கல்வியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர்.
மொத்தமுள்ள 2110 சேர்க்கை இடங்களில் முதல் கட்ட கலந்தாய்வில் 1970 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 140 இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்கும் என்றும், அதற்கு 210 மாணவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் லேடி வெலிங்டன் கல்லூரி முதல்வர் ஜி. பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.
