தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வன உயிரின வார விழா : போட்டிகள் அறிவிப்பு

வன உயிரின வார விழா : போட்டிகள் அறிவிப்பு

வன உயிரின வார விழா : போட்டிகள் அறிவிப்பு


UPDATED : செப் 02, 2011 12:00 AM

ADDED : செப் 02, 2011 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2011 12:00 AM ADDED : செப் 02, 2011 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வன உயிரின வார விழாவை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி வரையிலான மாணவ, மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வனத் துறை சார்பில் ஆண்டுதோறும் அக்டோபரில், வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, செப்., 4ம் தேதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் 4ம் தேதி கிண்டி சிறுவர் பூங்காவில் "பல்லுயிர் பெருக்கம் மற்றும் வன உயிரினங்கள்" குறித்த வினாடி வினா போட்டிகள், காலை 9 மணி முதல் 11 மணி வரை நடக்கிறது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை "வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு" என்ற தலைப்பில், பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப்போட்டிகள், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை குரூப்-ஏ எனவும், கல்லூரி மாணவர்களுக்கு குரூப் பி எனவும், 12 வயதிற்கு மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு குரூப் சி எனவும் பிரித்து நடத்தப்படுகிறது.

அடுத்ததாக,"பல்லுயிர் பெருக்கம் பாதுகாப்பு" என்ற தலைப்பிலான ஓவியப் போட்டிகள், வரும் 11ம் தேதி சென்னையில் அடையாறு, ராணி மெய்யம்மை உயர்நிலைப் பள்ளி; அம்பத்தூர், படூர் எபினேசர் மார்கஸ் மெட்ரிக் பள்ளி; புரசைவாக்கம், சத்யா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி; பாலவாக்கம், லைப் ஹெல்ப்; தாம்பரம், ஜெயகோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரம்பூர், மேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடக்க இருக்கின்றது.

இது குறித்து, கிண்டி சிறுவர் பூங்காவின், வன உயிரின காப்பாளர் கர்ணபிரியா கூறும் போது, "வனத் துறை சார்பில் நடத்தப்படும் போட்டிகளில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த அனைத்து மாணவர் களும் கலந்து கொள்ளலாம். இதில், ஆர்வத்துடன் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் போட்டிகள் நடக்கும் இடத்திற்கு வரும் போது தங்களின் பள்ளி, கல்லூரி அடையாள அட்டை அல்லது பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதல் கடிதம் என்று, ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us