தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு ஐ.டி.ஐ.களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை


UPDATED : செப் 02, 2011 12:00 AM

ADDED : செப் 02, 2011 06:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2011 12:00 AM ADDED : செப் 02, 2011 06:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டின் தொழில் திறன் கொண்ட இளைஞர்களை உருவாக்குவதால் வாழ்க்கை மேம்பாடுவதுடன், நாடு உயரும் என்ற நோக்கில் தற்போது, தமிழ்நாடு அரசு தொழிற்திறன் மேம்படுத்துவதை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நம் மாநிலத்தில் தொழில் துறை நிறுவனங்களுக்கு ஏராளமான தொழில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தேவைப்படுகின்றனர்.

தொழிற் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புள்ளது. பயிற்சி கட்டணம் இலவசம். சேர்க்கை கட்டணம் 245 ரூபாய் மட்டும். பயிற்சி முடிந்த பின் 100 ரூபாய் திருப்பி கொடுக்கப்படும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், அரசு விடுதி, தாழ்த்தப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ஆண்டுக்கு 1,800 ரூபாய், பழங்குடியினருக்கு 2,100 ரூபாய், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 1,200 ரூபாய் அரசு உதவித்தொகை வழங்குகிறது.

இலவச கம்ப்யூட்டர், ஆங்கில பேச்சு பயிற்சி, இலவச காலணிகள், சீருடைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு விவசாயிகள், விவசாய தொழிலாளர் (சமூகம் மற்றும் பாதுகாப்பு) திட்டத்தின் கீழ் 1,750 ரூபாய் உதவித்தொகை, அசோக் லேலாண்ட், டி.வி.எஸ்., டைட்டான் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் நிலைய நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

பயிற்சியில் சேர எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சியும் 14 வயது முதல் 40 வரையுள்ளவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

அரசு ஐ.டி.ஐ.,களில் தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. தகுதியுள்ளவர்கள் கல்வி சான்றுடன் அரசு ஐ.டி.ஐ., முதல்வரை அணுகி பயன் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us