UPDATED : செப் 03, 2011 12:00 AM
ADDED : செப் 03, 2011 12:59 PM
அ நிறம் | அளவு
இந்தியாவைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலை படிப்பு படிக்கும் வகையில் பிரிட்டிஷ் கவுன்சில் தலா ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கியது. சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் அலவலகத்தில் நேற்று உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் மைக் நிதாவ்ரியானகிஸ் உதவித் தொகைகளை வழங்கினார். இந்த உதவித் தொகையின் மூலம் இந்திய மாணவர்கள் 8 பேரும் வெளிநாடுகளில் முதுநிலை படிப்பில் படிக்க முடியும். உதவித் தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்திய மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் விதமாக ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
