சிக்கலில் உள்ள முதுநிலை சித்த மருத்துவ சேர்க்கை இடங்கள்
சிக்கலில் உள்ள முதுநிலை சித்த மருத்துவ சேர்க்கை இடங்கள்
UPDATED : செப் 06, 2011 12:00 AM
ADDED : செப் 06, 2011 11:29 AM
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளில் சுமார் 100 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேப்போல, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வேலுமயில் சித்த மருத்துவக் கல்லூரியின் 40 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், கோவை ஆர்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியின் 30 இடங்கள், கன்னியாகுமரி படுக்கடையில் உள்ள ஏ.டி.எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியின் 50 இடங்கள் என 120 இடங்களிலும் மாணவர்களைச் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று நாகர்கோயிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 50 பட்டப்படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.) இடங்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தர்ம ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 40 இடங்கள் என மொத்தம் 90 பி.ஏ.எம்.எஸ். இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பட்டப்படிப்பு இடங்களுக்கும், 20 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் 50 பட்டப்படிப்பு இடங்களுக்கும், மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் 50 பட்டப்படிப்பு இடங்களுக்கும் அனுமதி கிடைக்காத நிலையே உள்ளது. விதிவிலக்காக மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 40 பட்டப்படிப்பு இடங்களுக்கு மட்டுமே நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
