தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரத்தான சித்த மருத்துவ இடங்களை பெற அரசு தீவிரம்

ரத்தான சித்த மருத்துவ இடங்களை பெற அரசு தீவிரம்

ரத்தான சித்த மருத்துவ இடங்களை பெற அரசு தீவிரம்


UPDATED : செப் 07, 2011 12:00 AM

ADDED : செப் 07, 2011 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2011 12:00 AM ADDED : செப் 07, 2011 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், 220 சித்த மருத்துவ இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டதற்கு, சித்த மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என, மூத்த சித்த மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோல், நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கும், கல்லூரி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே காரணம் என்று கூறப்படுகிறது.

கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைக்கு, நோயாளிகளின் வருகை குறைந்து வருவது குறித்து, உரிய நேரத்தில் அரசுக்குத் தெரிவித்து, நிவர்த்தி செய்யத் தவறியது, காலியாக உள்ள பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுக்காதது போன்ற காரணங்களால், அரசு சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 150 இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என, புகார் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நீடிக்கும் இப்பிரச்னையில், இந்திய மருத்துவத் துறை ஆணையர் அலுவலகமும், போதிய அக்கறை காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில், 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், 5 தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மிகவும் பழமை வாய்ந்தது. இது தவிர, சென்னை அரும்பாக்கம் அண்ணா வளாகத்தில், ஒரு அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில், இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க, மத்திய கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. நோயாளிகளின் வருகை 38 சதவீதமாக குறைந்தது விட்டது. போதிய ஆசிரியர்கள் இல்லை எனக் காரணம் கூறி, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், முதுநிலை படிப்புக்கான 40 இடங்கள், 25ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல், 3 தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில், 120 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சித்த, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர, கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில், நோயாளிகளின் வருகை 40 சதவீதமாக இருக்க வேண்டும்.

முதல்வர் உட்பட 35 ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டும் என, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய கவுன்சில் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகளை கல்லூரி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை. அதனால், அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மூத்த சித்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக, இப்பிரச்னை இருந்து வருகிறது. விரைவில் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வோம் என, கல்லூரி நிர்வாகம் உறுதி கொடுக்க, அதை ஏற்று, மத்திய கவுன்சிலும் அனுமதி அளித்து வந்தது. ஆனால், அனுமதி கிடைத்தவுடன் எல்லாவற்றையும் மறந்து விடுகின்றனர். நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய, கல்லூரி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அடுத்த கல்வியாண்டு வரை சும்மா இருந்துவிட்டு, மீண்டும் பழைய பல்லவியையே பாடி வந்ததால் தான், இந்தாண்டு மத்திய கவுன்சில், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு, அந்த சித்த மருத்துவர் கூறினார்.

நோயாளிகளின் வருகை குறைந்து வருவது பற்றி, கல்லூரியில் பணிபுரியும் டாக்டரிடம் கேட்டபோது, ""பல மருந்துகள் போதிய அளவில் இருப்பு இல்லாததே முக்கியக் காரணம். சித்த மருந்துகளைப் பொறுத்தவரை, பல மருந்துகள், நீண்டநாள் எடுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், மருந்துகள் இருப்பு இல்லாததால், வேறு வழியின்றி மாற்று மருந்துகளைக் கொடுப்பர். இதனால், நோய் குணமடைவது மேலும் தாமதமாகும். இதுவே, நோயாளிகளின் எண்ணிக்கை குறைய முக்கியக் காரணம்&'&' என்றார். ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், கல்லூரி நிர்வாகம் உரிய முயற்சி எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, வேறொரு டாக்டர் கூறும்போது, ""தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என, தாமதம் செய்கின்றனர். இதைத் தவிர்க்க, அனுபவமுள்ளவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து, பின் அவர்களை நிரந்தரமாக்கலாம்&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us